தினமலர் 02.03.2010
இறைச்சி கடைகளில் ஆய்வு‘
தூத்துக்குடி : புதுக்கோட்டை இறைச்சி கடைகளில் சுகாதார ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.புதுக்கோட்டையில் இறைச்சி விற்பனை மையங்கள், உணவாளர் உரிமம் பெற்றுள்ளாரா? இறந்து போன விலங்கின் இறைச்சி விற்கின்றனரா? சுகாதாரமான முறையில் சேகரிக்கப்பட்டுள்ளதா? என ஆய்வு செய்து பொது சுகாதார சட்ட பிரிவுகளின் படியும், உணவு கலப்பட தடுப்பு சட்ட பிரிவுகளின் படியும் புதுக்கோட்டை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராமசாமிராஜா மற்றும் உணவு ஆய்வாளர் சண்முகசுந்தரம் ஆய்வு செய்து நோட்டீஸ் வழங்கினர்.