தினமலர் 26.04.2010
இலவச பிறப்பு சான்றிதழ்
திருவாரூர்:திருவாரூர் மாவட்டத்தில் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பள்ளி சேர்க்கைக்காக இலவச பிறப்பு சான்றிதழ் வழங்கப்பட உள்ளதாக சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் சகாயமேரிரீட்டா தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:தமிழக அரசு ஆணைப்படி திருவாரூர் மாவட்டத்தில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவச பிறப்பு சான்றிதழ் வழங்கும் மாதங்களாக ஏப்ரல், மே ஆகியவை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இம்மாதங்களில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு பள்ளி சேர்க்கைக்காக இலவசமாக பிறப்பு சான்றிதழ்கள் குழந்தை பிறந்த இடங்களில் உள்ள தாசில்தார் அலுவலகம், பேரூராட்சி அலுவலகம் மற்றும் நகராட்சி அலுவலங்களில் வழங்கப்பட உள்ளது. பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு தங்கள் குழந்தைகளுக்கு இலவசமாக பிறப்பு சான்றிதழ்கள் பெற்றுக் கொள்ளலாம். இது தொடர்பாகவும், பிறப்பு, இறப்பு பதிவு தொடர்பான விவரங்களுக்கும் துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் (செல்போன் எண்: 94437–10133), உதவி இயக்குனர் (98651–77416) ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.