தினமலர் 21.04.2010
இளநிலை உதவியாளர் பணியிடம் அறிவிப்பு
திருப்பூர்: தமிழ்நாடு குடிநீர் மற்றும் நீரகற்று அலுவலகங்களில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஜோதிமணி வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு குடிநீர் வடிகால் மற்றும் நீரகற்று வாரிய அலுவலகங்களில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் பணியிடத்துக்கு, அங்கீகரிக்கப் பட்ட பல்கலையில் பட்டம் பெற்றவர்கள் நியமிக்கப்படுவர். பழக்குடி, தாழ்த்தப்பட்டவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்படுத்தப்பட்ட பிரிவில், 18 வயதுக்கு மேல் 58 வயதுக்கு உட்பட்டவர்களும், பொதுப்பிரிவில் 35வயதுக்குள்ளும் இருப்பவர்கள் தேர்வு செய்யப் படுவர். வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பட்டியல் வெளியிடப்படும். வரும் 23ம் தேதிக்குள் தங்களது பெயர் இடம் பெற்றுள்ளதா என் பதை உறுதிசெய்து கொள்ள வேண்டும். மேலும் விபரங்களுக்கு ‘தீதீதீ.tடிணூதணீதணூ.tண.ணடிஞி.டிண‘ என்ற இணைய தள முகவரியை தொடர்புகொள்ளலாம். இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.