தினகரன் 05.10.2010
ஈமக்கிரியை கட்டிடம் திறப்பு
பெரம்பலூர், அக். 5: பெரம்பலூர் நகராட்சியில் ஈமக்கிரியை கட்டிடத்தை மத்திய அமைச்சர் ராசா திறந்து வைத்தார்.
பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் தெற்குகரையில் இறந்தவர்களுக்கு நடத்தப்படும் ஈமக்கிரியை சடங்கு நடத்தும் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது. ரூ.3.50 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள கட்டிடத்தை அமைச்சர் ராசா நேற்று திறந்து வைத்தார். அதைதொடர்ந்து தெப்பக்குளத்தை சுற்றிலும், பொதுமக்கள், சிறுவர்கள் நடந்து செல்லும் சிமென்ட் நடைபாதை அமைக்கவும், பாதாள சாக்கடை திட்டப்பணிகள் உள்ளிட்ட வளர்ச்சித்திட்ட பணிகளை விரைந்து முடிக்க சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். பருவமழை காரணமாக நகரில் தண்ணீர் தேங்கி நிற்கும் பகுதிகளுக்கும், குப்பைகள் குவிந்து கிடக்கும் இடங்களுக்கும் சுகாதாரத்துறையினர் விரைந்து சென்று அப்புறப்படுத்தி தொற்றுநோய் பரவாமல் குடிதண்ணீரை சுகாதாரமாக வழங்க உத்தரவிட்டார். எம்எல்ஏ ராஜ்குமார், நகராட்சி தலைவர் இளையராஜா, துணைத்தலைவர் முகுந்தன், ஆணையர்(பொ) கருணாகரன், கவுன்சிலர்கள் பாரி, கனகராஜ், மாரிக்கண்ணன், ஜெயக்குமார், கருணாநிதி, ரமேஷ், ரஹமத்துல்லா, சிவக்குமார், ஈஸ்வரி, புவனேஷ்வரி, கண்ணகி, பொற்கொடி மற்றும் நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர். .