தினபூமி 14.06.2013
ஈரோட்டில்அம்மா உணவகத்தில் அமைச்சர் ஆய்வு
ஈரோடு, ஜூன்.14 – ஈரோட்டு மாநகராட்சியில் கடந்த வாரம் கொல்லம் பாளையம்,
ஆர் .என் புதூர், பார்க் ரோடு உள்பட 10 இடங்களில் அம்மா உணவகத்தை
முதல்வர் ஜெயலலிதா வீடியோ கான்பிரன்ஸ் முலம் திறந்து வைத்தார். பொது
மக்களிடம் அமோக வரவேற்பை பெற்ற இந்த அம்மா உணவங்களில் தினமும் 1000
கணக்கனோர் பசியாறி முதல்வரை வாழ்த்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த
வாரம் ஈரோட்டில் உள்ள ஆர்.என்.புதூர் பகுதியில் உள்ள அம்மா உணவகத்தில்
அமைச்சர் கே.வி .ராமலிங்கம் ஆய்வு மேற்கொண்டு ஆலோசனைகளை வழங்கினார்.
இதேபோல் நேற்று காலை ஈரோடு காந்திஜீ ரோட்டில் உள்ள மகப்பேறு
மருத்துவமனை அருகே அமைந்துள்ள அம்மா உணவகத்தில் திடீர் ஆய்வு
மேற்கொண்டார்.பின் அவர் அங்குள்ள அரிசி,காய்கறி பிரிவுக்கு சென்று அவைகள்
தரமானதாக உள்ளதாக,சுகாதாரமாக உள்ளதா? என ஆய்வு செய்தார்.மேலும் அங்குள்ள
சமையல் அறைகளை சுத்தமாக வைத்துகொள்ள ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
பின் அவர் கூறுகையில் அம்மா உணவகத்தில் தயார் செய்யப்படும் உணவு வகைகள்
தரமானதாகவும் சுவையானதாகவும் உள்ளது என கூறினார் .அமைச்சர் ஆய்வின் போது
மண்டல தலைவர்கள் மனோகரன், மாநகராட்சி கமிஷனர் விஜலட்சுமி உடன் இருந்தனர்.