தினத்தந்தி 23.09.2013
உடுமலையில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

உலக தூய்மை தின விழாவையொட்டி உடுமலை
நகராட்சி மற்றும் ஆரண்யா அறக்கட்டளை ஆகியவற்றின் சார்பில், பிளாஸ்டிக்
ஒழிப்பு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நாளை (திங்கட்கிழமை) நடக்கிறது.
சைக்கிள் பேரணி குட்டைத்திடலில் இருந்து காலை 7.30 மணிக்கு புறப்படுகிறது.
பேரணியை நகராட்சி தலைவர் கே.ஜி.எஸ்.ஷோபனா தொடங்கி வைக்கிறார். பேரணி
கச்சேரிவீதி, கல்பனா ரோடு, பொள்ளாச்சி ரோடு உள்பட நகரின் முக்கிய வீதிகள்
வழியாக பழனி ரோட்டில் உள்ள ஆர்.ஜி.எம்.மேல்நிலைப்பள்ளியை சென்றடைகிறது.
பேரணியில் சுமார் 200 பேர் சைக்கிளில் செல்ல உள்ளனர். இந்த தகவலை ஆரண்யா
அறக்கட்டளை நிர்வாகி ஆர்.நந்தினி ரவீந்திரன், செயலாளர் ஏ.கார்த்திகேயன்
ஆகியோர் தெரிவித்தனர்.