உடுமலை ஸ்டேட்வங்கி காலனியில் நகராட்சி நேரு பூங்கா மைதானம் திறப்பு விழா
உடுமலை ஸ்டேட் வங்கி காலனி திருவள்ளுவர் வீதியில் நகராட்சி நேரு பூங்கா மைதானம் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா. கண்தான ஒப்புதல், மரக்கன்றுகள் நடுதல் ஆகிய முப்பெரும் விழா ஸ்டேட் வங்கி காலனி குடியிருப்போர் நலசங்கம் சார்பில் நடந்தது. விழாவுக்கு சங்க கவுரவ தலைவர் ஏ. பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். சங்க தலைவர் எஸ்.மாணிக்கம், துணை தலைவர் ஆர்.பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் ஜி.மதுரை வீரன் வரவேற்று பேசினார்.
நகராட்சி நேரு பூங்கா மைதானத்தை தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. வாரியத் தலைவர் உடுமலை கே. ராதாகிருஷ்ணன் திறந்து வைத்து பேசினார். கல்வெட்டை நகராட்சி தலைவர் கே.ஜி.எஸ்.ஷோபனாவும், குழந்தைகள் விளையாட்டு உபகரணங்களை நகராட்சி கவுன்சிலர் என்.ராஜேந்திரனும் திறந்து வைத்தனர். நகராட்சி துணை தலைவர் எம்.கண்ணாயிரம் மரக்கன்றுகளை நட்டினார். கண்தானம் விழிப்புணர்வு குறித்து அரிமா சங்க மாவட்ட தலைவர் ஆர்.பாலசுப்பிரமணியம் பேசினார். நேதாஜி நல சங்க முன்னாள் கவுரவ தலைவர் டி.கோவிந்தராஜ் வாழ்த்தி பேசினார். முடிவில் யு.கே.நந்தகுமார் நன்றி கூறினார். விழாவில் ரெயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினர் கே.ஜி.சண்முகம், நகராட்சி கவுன்சிலர்கள், குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.