தினகரன் 13.10.2010
உத்தமபாளையம் பஸ் ஸ்டாண்டில் மராமத்து பணி தீவிரம்
உத்தமபாளையம், அக். 13: உத்தமபாளையம் பஸ் ஸ்டாண்டில் பகுதி 2ம் திட்டத்தின் கீழ் மராமத்து பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. அனைத்து பேரூராட்சி நிர்வாகம் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.59.50 லடசம் செலவில் உத்தமபாளையம் பகுதியில் அனைத்து வார்டுகளிலும் சாலைகள், சாக்கடைகள் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. மேலும் பகுதி 2ம் திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் செலவில் உத்தமபாளையத்தில் பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன. இதில் பஸ் ஸ்டாண்ட் உட்புற பகுதியில் சிமென்ட் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. முன்புறம், பேருந்து நுழையும் இடம், வெளியேறும் இடங்களில் வளைவுகள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த பணிகளை நேற்று உத்தமபாளையம் பேரூராட்சி தலைவர் மெகர்நிஷா சையது மீரான், துணை தலைவர் காசிம், நிர்வாக அதிகாரி கணேசன் ஆகி யோர் பார்வையிட்டனர்.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், “பஸ் ஸ்டாண்ட் மராமத்து பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. பஸ் ஸ்டாண்ட் உட்பட நகரில் அனைத்து வார்டுகளிலும் நடந்து வரும் பணிகள் அனைத்தையும் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்றனர்.