உப்பிடமங்கலத்தில் பேரூராட்சி இயக்குநர் ஆய்வு
கரூர் மாவட்டம், உப்பிடமங்கலம் பேரூராட்சியில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சிப் பணிகளை பேரூராட்சிகளின் இயக்குநர் அண்மையில் ஆய்வு மேற்கொண்டார்.
உப்பிடமங்கலம் பேரூராட்சிக்கு 2012-13-ல் வறட்சி நிவாரணத் திட்டத்தின் கீழ், ரூ. 12 லட்சம் ஒதுக்கப்பட்டது. இதில் பாறப்பட்டு, சின்னாக்கவுண்டனூர் ஆதிதிராவிடர் தெரு, கருப்பூர், புதுக்கஞ்சமனூர், சாலப்பட்டி ஆகிய கிராமங்களில் தலா ரூ. 2 லட்சம் வீதம் மினி பவர் பம்ப், குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது.
மேலும், ராஜாகவுண்டனூர், புகையிலைகுறிச்சியானூர் ஆகிய கிராமங்களில் தலா ரூ. 1 லட்சம் வீதம் ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்தப் பணிகளை பேரூராட்சிகளின் இயக்குநர் செல்வராஜ் அண்மையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திண்டுக்கல் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் தமிழரசி, உதவி நிர்வாக பொறியாளர் சாய்ரா, உதவி பொறியாளர் முரளி உள்பட பலர் உடனிருந்தனர்.