தினமணி 4.11.2009
உள்ளாட்சி தின விழா: மாணவர்களுக்கு பரிசுகள்
கும்மிடிப்பூண்டி, நவ. 3: நவம்பர் 1-ம் தேதியை உள்ளாட்சி தினமாக கொண்டாட தமிழக அரசு உத்தரவிட்டதைத் தொடர்ந்து கும்மிடிப்பூண்டி பேரூராட்சியிலும் கடந்த ஞாயிற்றுக்கிழமை உள்ளாட்சி தின விழா கொண்டாடப்பட்டது.
இவ் விழாவில் பேரூராட்சி கவுன்சிலர்கள்,தன்னார்வ தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள், மகளிர் குழு உறுப்பினர்கள், பேரூராட்சி அலுவலர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
விழாவை பேரூராட்சித் தலைவர் கே.என்.பாஸ்கர் வரவேற்புரையுடன் தொடக்கி வைத்தார். விழாவை முன்னிட்டு கும்மிடிப்பூண்டி பேரூராட்சி அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
கும்மிடிப்பூண்டி பேரூராட்சி அலுவலகம்,பஸ் நிலையம் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.அதைத் தொடர்ந்து பேரூராட்சி முழுக்க சிறப்பு துப்புரவு முகாம் நடத்தப்பட்டு கும்மிடிப்பூண்டி பேரூராட்சி முழுக்க கால்வாய், தெருக்கள் துப்புரவு செய்யப்பட்டது.
விழாவை முன்னிட்டு பேரூராட்சியால் “சுகாதாரத்தில் மாணவர்கள் பங்கு‘என்ற தலைப்பில் பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, பட்டிமன்றம் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
கும்மிடிப்பூண்டி பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயக்குமார் உள்ளாட்சி தினத்தின் சிறப்புகளை பேரூராட்சி கவுன்சிலர்கள் மற்றும் அலுவலர்களுக்கு எடுத்துரைத்தார்.
இந்த விழாவுக்கு, கும்மிடிப்பூண்டி பேரூராட்சித் தலைவர் கே.என்.பாஸ்கர் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் ஜெயக்குமார், துணைத் தலைவர் இரா.ரமேஷ் முன்னிலை வகித்தனர்