தினமலர் 12.04.2010
ஒகேனக்கல் குடிநீர் திட்டம் நிறைவேற்ற வேண்டுகோள்
தர்மபுரி: ‘தர்மபுரி மாவட்டத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க ஓகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும், ‘ என்று வன்னியர் சங்க பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.தர்மபுரி மாவட்ட வன்னியர் சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது. சங்க துணை தலைவர் செல்வம் தலைமை வகித்தார். மாது முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் வஜ்ஜரவேலு வரவேற்றார். வன்னியர் சங்க தலைவர் குரு பேசினார். மாமல்லபுரத்தில் வரும் 28ம் தேதி நடக்கும் வன்னியர் இளைஞர் சித்திரை முழு நிலவு பெருவிழாவில் தர்மபுரி மாவட்டத்தில் இருந்து ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்ள வேண்டும்.
தர்மபுரி மாவட்டத்தில் கடும் வறட்சி நிலவுவதால் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க ஓகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொறுப்பாளர்கள் வேடி, பாலு, முருகேசன், கவிதா செல்வராஜ், பெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்