தினமலர் 05.03.2010
கடைகளில் பழைய இறைச்சி: உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை
கூடலூர் : தேவர்சோலை நகரின் இறைச்சி கடையில் வைக்கப்பட்டிருந்த பழைய இறைச்சி, பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.தேவர்சோலை பேரூராட்சி செயல் அலுவலர் ராஜகோபால் தலைமையில், நெலாக்கோட்டை மருத்துவ அலுவலர் டாக்டர் கிருஷ்ணராஜ், சுகாதார ஆய்வாளர் ராமலிங்கம் மற்றும் பேரூராட்சி ஊழியர்கள், தேவர்சோலை நகரில் உள்ள மாட்டிறைச்சி கடைகளில் ஆய்வு செய்தனர். விற்பனைக்காக வைத்திருந்த 25 கிலோ பழைய மாட்டிறைச்சியை பறிமுதல் செய்து அழித்தனர்.செயல் அலுவலர் ராஜகோபால் கூறுகையில், “”பழைய இறைச்சியை விற்பனை செய்யக் கூடாது என, இறைச்சி கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மீறி விற்பனை செய்வது தெரியவந்தால், கடைக்கு “சீல்‘ வைக்கப்படும்,” என்றார்.