தினமலர் 25.01.2010
கடைகளில் விற்கப்படும் சமையல் எண்ணெய்: ஆய்வுக்கு சேகரிப்பு
கும்மிடிப்பூண்டி : மக்களின் உடல் நலன் கருதி மார்க்கெட்டில் விற்பனையில் உள்ள அனைத்து தர சமையல் எண்ணெய்கள் ஆய்வுக்காக சேகரிக்கப்பட்டது.தமிழக அரசின் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை சார்பில், மக்களின் உடல் நலன் கருதி மார்க்கெட்டில் விற்பனையில் உள்ள பல தரப் பட்ட சமையல் எண்ணெய்களை ஆய்வு நடத்த முடிவு செய்யப்பட்டது.அதன்படி கும்மிடிப்பூண்டி வட்டார சுகாதார ஆய்வாளர் முருகன் தலைமையில் சுகாதாரத் துறையினர் அப்பகுதியில் உள்ள மளிகை கடைகளில் விற்கப்படும் சமையல் எண்ணெய் பாக் கெட்டுகளை சேகரித்தனர்.சேகரிக்கப்பட்ட சமையல் எண்ணெய்களை ஆய்வுக்காக, சென்னையில் உள்ள உணவு ஆய்வகத்திற்கு அனுப்பட்டது.பள்ளிகளை சுற்றியுள்ள பெட்டி கடைகளில் விற்கப்பட்ட மாத்திரை வடிவ மிட்டாய்களை சுகாதார குழுவினர் பறிமுதல் செய்து எச்சரித்தனர்.