தினகரன் 02.09.2010
கடைகளுக்கு முன்னால் நோ பார்க்கிங் போர்டுக்கு உயர் நீதிமன்றம் தடை
சென்னை
, செப்.2: ‘நோ பார்க்கிங்’ போர்டு வைக்க, கடை உரிமையாளர்களுக்கு தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.சென்னை பாரிமுனையை சேர்ந்த கிருஷ்ணமணி
, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:சென்னை நகரில் பாரிமுனை
, தி.நகர், புரசைவாக்கம், அடையாறு போன்ற ஷாப்பிங் முக்கியத்துவம் பெற்ற பகுதிகளில் பார்க்கிங் பிரச்னை உள்ளது. இங்குள்ள பெரும்பாலான கடைகளுக்கு எதிரே ‘நோ பார்க்கிங்’ போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன.சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களே இந்த போர்டுகளை வைத்துள்ளனர்
. தங்கள் கடையின் வாசல் பகுதியில் சங்கிலி கட்டி பார்க்கிங்குக்கு தடை போட்டு வருகின்றனர்.அவர்கள் கடைக்கு வரும் வாகனங்களை மட்டும் அங்கு அனுமதிக்கிறார்கள்
. மற்றவர்கள் வாகனங்களை நிறுத்தினால் செக்யூரிட்டிகளை விட்டு விரட்டுகிறார்கள். மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை கடை முதலாளிகள் ஆக்கிரமிக்க கூடாது. எனவே, கடை உரிமையாளர்கள் ‘நோ பார்க்கிங்’ போர்டு வைக்க தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது
.இதை நேற்று விசாரித்த தலைமை நீதிபதி இக்பால் மற்றும் நீதிபதி சிவஞானம் ஆகியோர்
, “சென்னை மாநகரில் உள்ள கடைகள் முன்பு கடை உரிமையாளர்கள் ‘நோ பார்க்கிங்’ போர்டு வைக்க கூடாது.அவற்றை உடனடியாக அகற்ற வேண்டும்
. மீறி வைப்பவர்கள் மீது போலீசாரும், மாநகராட்சியும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர். மேலும், இதுதொடர்பான விரிவான உத்தரவு விரைவில் பிறப்பிக்கப்படும் என்று தெரிவித்தனர்.