தினமலர் 02.08.2010
கணியூர் பேரூராட்சி கூட்டம்
மடத்துக்குளம்:கணியூர் பேரூராட்சியின் சாதாரணக்கூட்டம் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்துக்கு தலைவர் ஊராட்சித்தலைவர் விமலா தலைமை வகித்தார். செயல் அலுவலர் தாஜ்நிசா முன்னிலை வகித்தார்.பஸ் ஸ்டாண்டில் குளியலறையுடன் கூடிய நவீன கட்டணக்கழிப்பிடம் கட்டுவது, பேரூராட்சி தென்னந்தோப்பு பாதுகாப்புக்கு வேலி அமைக்கவும், அலுவலகத்துக்கு தேவையான மேஜை, நாற்காலிகள் வாங்குவது,துப்புரவுப்பணியாளர்களின் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்குவது, ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தெருவுக்கு சிமென்ட் தளம் அமைப்பது, பள் ளிக்கு அருகில் சின்டெக்ஸ் தொட்டி அமைப்பது, பாவா வைத்திய சாலை பகுதியில் சிமென்ட் தளம் அமைப்பது,அண்ணா நகர் பள்ளிக்கு குடிநீர் இணைப்பு வழங்குவது உள்ளிட்ட பணிகள் செய்ய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. ஜூன் மாத வரியினங்கள் மற்றும் செலவு சீட்டு எண் 41 முதல் 106 வரை மன்றத்தின் பார்வைக்கு வைக்கப்பட் டது. பேரூராட்சி கவுன்சிலர்ககள் பங்கேற்றனர்.