தினமலர் 05.05.2010
கண்டாச்சிபுரம் பேரூராட்சியாக தரம் உயர்த்தப்படுமா?: அதிகாரிகளின் நடவடிக்கை தேவை
திருக்கோவிலூர்: கண்டாச்சிபுரம் ஊராட்சியில் 15 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசித்தாலும் பேரூராட்சி அந்தஸ்து கிடைக்காமல் திணறி வருகிறது. இந்த பகுதியை பேரூராட்சியாக தரம் உயர்த்த இங்கு படித்து வளர்ந்த அமைச் சர் பொன்முடி நடவடிக்கை எடுக்க வேண்டும். கண்டாச்சிபுரம் வளர்ந்து வரும் நகரம். சுமார் 15 ஆயிரத் திற்கும் அதிகமான மக்கள் வசிக் கும் இந்த ஊராட்சியில் வசிக் கும் மக்களின் முக்கிய தொழில் நெசவு. அடுத்தபடியாக விவசாயம். விசைத் தறி நடத்துவோரிடம் போட்டி போட முடியாமல் நெசவுத் தொழில் நலிந்து தொழிலாளர்கள் கூலி த்வலைக்கு வெளியூர் செல்லும் நிலைக்கு ஏற்பட்டுள்ளது. சைவத்தை தீவிரமாக பின் பற்றும் இக்கிராமத்தில் தமிழ், தறி ஆசிரியர்களின் எண் ணிக்கை அதிகம். தமிழ் பல்கலைக் கழக முன்னாள் வேந்தர் பாலசுப்ரமணியன், தமிழக உயர்கல்வித் துறை அமைச்சராக இருக்கும் பொன்முடி வரை பலரையும், டாக்டர்களையும் உருவாக்கிய பெருமை இங்குள்ள அரசு உயர்நிலைப் பள்ளிக்கு உண்டு. விழுப்புரம்–திருவண்ணாமலை சாலையில் இருப்பதால் சுற்று வட்டாரத்தை சேர்ந்த 20 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கூடும் இடம் என்பதால் அனைத்து அடிப் படை வசதிகளுடன் ”கிராமம்” என்ற அந்தஸ்தில் இருந்து நகரமாக மாறியுள்ளது. ஆனால் அதற்கான சான்றிதழ் தான் இன் னும் கிடைக்கவில்லை. இதனால் சுகாதாரம், தெருவிளக்கு, குடிநீர் போன்ற வசதிகளை நிறை வேற்ற முடியாமல் ஊராட்சி நிர் வாகம் திணறி வருகிறது.
கற்பக விநா யகர் கோவில் தெருவை சேர்ந்த பழனிவேல் கூறியதாவது: மூன்று நாளைக்கு ஒரு முறை தான் தண்ணீர் வருகிறது. ஒரு லட்சம் கொள்ளளவு கொண்ட 2 தொட்டிகள் உள்ளன. மேலும் ஒரு தொட்டி கட்டி தினசரி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பல இடங்களில் கழிவுநீர் கால் வாய் கட்டியும் பராமரிக்காமல் தூர்ந்து போய் உள்ளன. இதனால் கழிவுநீர் தேங்கி கொசு தொல்லை அதிகரித்துள்ளது. கழிவுநீர் கால்வாயை பராமரிக்க ஆட்கள் நியமிக்க வேண்டும்.
சிவன்கோவில் தெருவை சேர்ந்த தண் டபாணி (58) கூறியதாவது: கைத்தறி தொழில் நலிவடைந்து விட்டது.இதனால் வருமானம் குறைந்து பிழைப்பிற் காக வெளியூர்களுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட் டுள்ளது. தறி நெய்பவர்களுக்கு பெண் கொடுக்க மறுக் கும் காலமாக மாறிவிட்டது. இந்த அவலத்தை போக்க கைத்தறியை விசைத் தறியாக மாற்ற அரசு நிதியுதவி வழங்க வேண்டும்.
அருணாச்சலம் மனைவி பரிமளா (34) கூறியதாவது: கணவன் மனைவி இருவரும் சேர்ந்து தறி நெய்தால் ஒரு நாளைக்கு 100 ரூபாய்தான் கூலி கிடைக்கிறது. கொத்தனார் வேலைக்கு செல்லும் கணவனும், மனைவியும் சேர்ந்து 400 ரூபாய் சம்பாதிக்கின்றனர். ஒரு பாவு நெய்து கொடுத்தால் 510 ரூபாய் தான் தருகின்றனர். இதனை 800 ரூபாயாக உயர்த்தி கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தென்மாடவீதியை சேர்ந்த ராமலிங்கம் (52) கூறியதாவது: பெரிய ஊராக இருக் கும் இந்த ஊராட்சியை நிர்வகிக்க போதுமான ஆட்கள் இல்லை. இதனால் வீட்டு வரி, தண்ணீர் வரி வசூலிப்பதே கிடையாது. பேரூராட்சியாக தரம் உயர்த்தினால் வீட்டுவரி, தண்ணீர் வரி உயர்த்தி விடுவார்கள் எனக் கூறி தரம் உயர்த்துவதை சிலர் வேண் டும் என்றே தடுக்கின்றனர். ஊராட்சி நிதியை வைத்து பேரூராட்சி அளவிற்கு வளர்ந்து விட்ட ஊரை நிர்வகிக்க முடியவில்லை. த்பரூராட் சியாக தரம் உயர்த்தி கூடுதல் பணியாளர்களை நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தென்மாட வீதியை சேர்ந்த ரவி (37) கூறியதாவது: ஆரம்ப சுகாதார நிலையத் தில் போதுமான வசதிகள் இல்லை. இங்கு மாதத்திற்கு 55 பிரசவம் நடக்கிறது. தனியாக பெண் டாக் டரை நியமிக்க வேண் டும். கூடுதல் கட்டடம் அமைத்து மருத்துவ மனையை தரம் உயர்த்த வேண்டும் எனக் கூறினார். அரசு அதிகாரிகள் முதல் அரசியல்வாதிகள் வரை உருவாக் கிய கண்டாச்சிபுரத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வதில் தயக்கம் காட்டாமல் பேரூராட்சியாக தரம் உயர்த்த அமைச் சர் பொன்முடி மற்றும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.