தினமலர் 13.08.2010
கரூர் பஸ் ஸ்டாண்டு பிளாட்ஃபாரம்தரை ஓடு பதிக்கும் பணி துவக்கம்
கரூர்: கரூர் பஸ் ஸ்டாண்ட் கோவை பஸ் நிற்கும் வடபுறம் பிளாட்பார்மில் தரை ஓடு பதிக்கும் பணி நேற்று முதல் துவங்கியது. பஸ் ஸ்டாண்ட் பணி மற்றும் இரட்டை வாய்க்கால் புனரமைப்பு பணிகளை நகராட்சி தலைவர் சிவகாமசுந்தரி, கமிஷனர் உமாபதி, முன்னாள் எம்.பி., பழனிசாமி, தி.மு.க., மாவட்ட பொறுப்பாளர் ராஜேந்திரன் மற்றும் அலுவலர்கள் பார்வையிட்டனர்.நகராட்சி கமிஷனர் உமாபதி கூறியதாவது: முன்னாள் எம்.பி., பழனிசாமி நிதி உதவியில் தரை ஓடு பதிக்கும் பணி நடக்கிறது. மொத்தம் 6,000 சதுர அடி பரப்பளவில் தரை ஓடு பதிக்கப்படுகிறது.
முதற்கட்டமாக வடக்கு புறம் பிளாட்பார்மில் தற்போது பணி நடக்கிறது.நகராட்சி சார்பில் 1.50 லட்சம் ரூபாயும், முன்னாள் எம்.பி., சார்பாக 2.40 லட்சம் ரூபாயும் செலவிடப்படுகிறது. இதுபோல் மற்ற பிளாட்பார்மிலும் தரை ஓடு பதிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.இரட்டை வாய்க்கால் முதற்கட்டபணி முடியும் தருவாயில் உள்ளது. ஒரு மாதத்தில் பணி முடிக்க அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட பணிக்கு நிதி ஒதுக்கீடு கிடைத்தால், மேற்கொண்டு திட்டம் தொடர்ந்து நடக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.