தினமணி 08.02.2010
களியக்காவிளை பேரூராட்சியில் சுயஉதவிக் குழுக்களுக்கு அடையாள அட்டை வழங்கல்
களியக்காவிளை, பிப். 7: களியக்காவிளை பேரூராட்சிப் பகுதியில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு களியக்காவிளை பேரூராட்சித் தலைவி எஸ். இந்திரா தலைமை வகித்தார். பேரூராட்சி செயல் அலுவலர் இரா. சங்கர், துணைத் தலைவர் சலாவுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் பேரூராட்சிப் பகுதியில் உள்ள அனைத்து மகளிர் சுய உதவிக் குழுவினருக்கும் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது. சுயஉதவிக் குழுக்களின் ஒருங்கிணைப்பாளர் ஜெயகுமாரி மற்றும் சுயஉதவிக் குழுவைச் சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டனர்.