தினமணி 12.07.2013
தினமணி 12.07.2013
கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி: நகராட்சி ஆணையர் ஆய்வு
விழுப்புரம் கே.கே.ரோடு பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியை நகராட்சி ஆணையர் ராஜேந்திரன் ஆய்வு செய்தார்.
விழுப்புரம், கே.கே.ரோடு பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி
நடைபெற்று வருகிறது. இப் பணிகள் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு
தொடங்கப்பட்டன. தற்போது கணபதி நகர் என்ற பகுதியில் பாலம் கட்டும் பணி
நடைபெற்று வருகிறது. இப் பணிகளை நகராட்சி ஆணையர் ராஜேந்திரன் ஆய்வு
செய்தார். கால்வாய் மற்றும் பாலம் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க
வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்.