தினத்தந்தி 22.08.2013
காங்கேயநல்லூர் அரசு பள்ளி மாணவர்களுக்கு லேப்–டாப் மேயர் வழங்கினார்

காங்கேயநல்லூர் திருமுருக கிருபானந்த
வாரியார் அரசு மேல்நிலை பள்ளியில் 144 மாணவ–மாணவிகளுக்கு அரசின் விலையில்லா
லேப்–டாப் வழங்கும் விழா நடந்தது. பள்ளி வளர்ச்சிக்குழு தலைவர்
எஸ்.ஆர்.கே.அப்பு, மாநகராட்சி சுகாதாரக்குழு தலைவர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை
வகித்தனர். தலைமை ஆசிரியர் பாண்டுரங்கன் வரவேற்றார்.

மாநகராட்சி மேயர் பி.கார்த்தியாயினி
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 144 மாணவ–மாணவிகளுக்கு விலையில்லா
லேப்–டாப் வழங்கி பேசினார்.
நிகழ்ச்சியில் கிருபானந்த வாரியார் தம்பி
மகன் புகழனார், வட்டார கல்விக்குழு உறுப்பினர் கோரந்தாங்கல் குமார்,
முன்னாள் ஒன்றிய குழு தலைவர் பி.நாராயணன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர்
சிவப்பிரகாசம், மாநகராட்சி கவுன்சிலர் இளவரசி ஏழுமலை, நிர்வாகிகள் திலகம்,
தா.ச.கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் முனிசாமி நன்றி
கூறினார்.