தினத்தந்தி 22.08.2013
கால்வாய்கள், குளங்களில் குப்பைகளை கொட்டினால் கடும் நடவடிக்கை கலெக்டர் எச்சரிக்கை
கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நெல்லை மாவட்ட கலெக்டர்
சி.சமயமூர்த்தி தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிஇருப்பதாவது:-
சுகாதார கேடு
நெல்லை மாநகராட்சிக்குள் உள்ள தண்ணீர் செல்லும் கால்வாய்கள் மற்றும்
குளங்களில் ஆங்காங்கே பொதுமக்கள் மற்றும் வணிக பெருமக்களால் குப்பைகள்
கொட்டப்பட்டுள்ளதை அவ்வப்போது காண நேரிடுகிறது.
இது ஒரு தவறான மற்றும் சுகாதார கேடான செயல் ஆகும். இவ்வாறு கொட்டப்படும்
குப்பைகள், வெள்ளக்காலங்களில் மழைநீர் செல்லும் வழியை அடைத்துக் கொண்டு
வெள்ளச்சேதம் ஏற்படவும், குப்பைகள் மழைநீரில் நனைவதால் துர்நாற்றம்
ஏற்பட்டு, பல்வேறு விதமான சுகாதார கேடுகள் ஏற்படவும் காரணமாகிறது.
நடவடிக்கை
எனவே இதுபோன்று தண்ணீர் செல்லும் கால்வாய்கள் மற்றும் குளங்களில்
குப்பைகளை கொட்டுவதை பொதுமக்கள் மற்றும் வணிக பெருமக்கள் தவிர்க்குமாறு
கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் குப்பைகளை அருகாமையில் உள்ள குப்பை
தொட்டிகளில் கொட்டுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதை மீறும்
பட்சத்தில் பொதுப்பணித்துறை மற்றும் மாநகராட்சி மூலம் தக்க நடவடிக்கை
மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.