தினமலர் 29.09.2010
கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்.,ல் இன்று நலவாரிய உறுப்பினர் பதிவு முகாம்
கரூர்: தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் மற்றும் உடலுழைப்பு தொழிலாளர் நல வாரியம் உட்பட 16 நலவாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்யும் சிறப்பு முகாம் இன்று காலை 10.30 மணிக்கு கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்து அலுவலகத்தில் நடக்கிறது.இதில், உடலுழைப்புத் தொழிலாளர்களை பதிவு செய்வதற்கு விண்ணப்பம் பெறப்படும். பதிவு செய்ய விரும்பும் தொழிலாளிகள் பதிவு விண்ணப்பத்துடன், சமீபத்தில் எடுத்த பாஸ்போர்ட் அளவு கொண்ட மூன்று ஃபோட்டோ, இருப்பிட சான்று, ரேஷன் கார்டு நகல், வயது சான்று, பிறப்பு சான்று நகல், டாக்டர் சான்று.பள்ளி மாற்றுச்சான்று நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல் இவற்றில் ஏதேனும் ஒன்றை இணைத்து விண்ணப்பம் அளிக்க வேண்டும். உடலுழைப்பு தொழிலில் பணிபுரிபவர் முகாமில் தங்களை இலவசமாக பதிவு செய்து அரசின் நல உதவித்தொகையை பெற்று பயன்பெறுமாறு கரூர் தொழிலாளர் அலுவலர் (சமூக பாதுகாப்பு திட்டம்) செல்வராஜ் அறிவித்துள்ளார்.