தினகரன் 29.11.2010
குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும் நகராட்சி அறிவுறுத்தல்
குளித்தலை, நவ.29: குளித்தலை பகுதியில் பொதுமக்கள் குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும் என்று நகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை மற்றும் புயல் சின்னம் காரணமாக தமிழகம் முழுவதும் விடிய, விடிய மழை பெய்து வருகிறது. இதனால், பல்வேறு மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்திலும் கடந்த 9ம்தேதி முதல் அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தொடர் மழை பெய்து வருவதால் தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்புண்டு. இதுகுறித்து குளித்தலை நகராட்சி தலைவர் அமுதவேல் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: குளித்தலை பகுதியில் பருவ மழை தொடர்ந்து பெய்து வருவதால் நகராட்சிக்குட்பட்ட பொதுமக்கள் அனைவரும் குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும். இதன் மூலம் தொற்று நோய்கள் பரவுவதை தடுக்கலாம்.