குடிநீர்த் திட்டப் பணிகள் அடிக்கல் நாட்டு விழா
காயல்பட்டினம் நகராட்சியில் ரூ. 29.67 கோடியில் 2-வது குடிநீர்த் திட்டத்துக்கான அடிக்கல் நாட்டு விழா, பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமார் தலைமை வகித்தார். 2-வது குடிநீர்த் திட்டப் பணிக்கான அடிக்கல்லை அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் திறந்து வைத்துப் பேசினார். நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் த.மோகன் வாழ்த்திப் பேசினார்.
விழாவில், காயல்பட்டினம் நகர்மன்ற துணைத் தலைவர் எஸ்.எம்.முகைதீன் என்ற மும்பை முகைதீன், நகர்மன்ற உறுப்பினர்கள் வி.எம்.எஸ்.முஹம்மத் செய்யித் ஃபாத்திமா, பி.எம்.எஸ்.சாரா உம்மாள், கே.வி.ஏ.டி.முத்து ஹாஜரா, ஏ.கே.முஹம்மத் முகைதீன், ஜெ.அந்தோனி, எம்.எம்.டி.பீவி ஃபாத்திமா என்ற பெத்தாதாய், காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவைத் தலைவர் எம்.எம்.உவைஸ், உறுப்பினர் எஸ்.எம்.மிஸ்கீன் ஸôஹிப் ஃபாஸீ, காயல்பட்டினம் நகர்மன்ற முன்னாள் தலைவர்களான கே.எம்.இ.நாச்சி தம்பி, ஏ.வஹீதா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். முன்னதாக காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் வரவேற்றார். நகராட்சி ஆணையர் ஜி.அசோக்குமார் நன்றி கூறினார்.