தினமணி 31.08.2012
குடிநீர் வழங்க புதிய மோட்டார் இயக்கம்
உளுந்தூர்பேட்டை பேரூராட்சிக்கு உள்பட்ட 14, 15, 16-ம் வார்டு பொதுமக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்கில், உளுந்தூர்பேட்டை-சென்னை சாலையில் உள்ள ஏரியில் ரூ.3 லட்சம் மதிப்பில் புதிய ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டது.
÷ அதிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் பைப் லைன் அமைத்து குடிநீர் விநியோகம் செய்ய பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதைத் தொடர்ந்து புதிய குடிநீர் மோட்டாரின் இயக்க விழா நடந்தது. பேரூராட்சித் தலைவர் க.ஜெயசங்கர் தலைமை வகித்து புதிய மோட்டாரை இயக்கி குடிநீர் விநியோகத்தைத் தொடங்கி வைத்தார்.
செயல் அலுவலர் இந்திரா, கவுன்சிலர்கள் சீனுவாசன், முருகன், முன்னாள் கவுன்சிலர் பிரின்ஸ் செந்தில்குமார், பேரூராட்சி உதவியாளர் தங்கவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.