தினமலர் 26.04.2010
குடிநீர் வாரியம், டான்சி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு பதிவுமூப்பு விபரம்
மதுரை,: தமிழ்நாடு குடிநீர் வாரியத்தில் இளநிலை உதவியாளர், டான்சியில் போர்மேன் பணியிடங்களுக்கு உத்தேச வேலைவாய்ப்பு பதிவுமூப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கான பதிவுமூப்பு விபரம் இணையதளத்தில் (<http:// (www.madurai.tn.nic.in) >) வெளியிடப் பட்டுள்ளன.குடிநீர் வாரியம்: எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு மட்டும். கல்வித் தகுதி இளங்கலை பட்டம். வயது: 1.7.2009 அன்று 18 முதல் 58க்குள். எஸ்.சி., முன்னுரிமை அற்றோருக்கு 20.4.1992 வரை. முன்னுரிமை உள்ளோருக்கு (கலப்பு திருமணம், தமிழ் மொழி காவலர் மட்டும்)- 4.7.2006. எஸ்.டி., முன்னுரிமை உள்ளோருக்கு 29.3.2010 வரை. முன்னுரிமை அற்றோருக்கு 26.8.2008 வரை. டான்சியில் பதிவுமூப்பு: கல்வித் தகுதி: மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கில் டிப்ளமோ படிப்பு. வயது– 1.7.2009 அன்று எஸ்.சி., எஸ்.டி.,க்கு 18 முதல் 40க்குள். எம்.பி.சி., பி.சி.,க்கு 37 வரை. ஓ.சி.,க்கு 35 வரை.முன்னுரிமை அற்றவர்கள்: எஸ்.சி., (பொது)- 16.5.1996வரை. பெண்கள்– 30.3.2010வரை எம்.பி.சி.,(பொது)- 21.6.1996 வரை. பி.சி.,(பொது)- 23.6.1994 வரை. ஓ.சி., (பொது)- 24.10.1994 வரை. பெண்கள்– 13.11.1996வரை. முன்னுரிமை உள்ளோர்: 30.3.2010 வரை பதிவு செய்துள்ள அனைத்து எஸ்.சி., எம்.பி.சி., மற்றும் பி.சி.,(முஸ்லிம்)களில் ஆதரவற்ற விதவை பிரிவு தவிர மற்றவை அனைத்தும். பி.சி., ஓ.சி.,யில் முன்னுரிமை உள்ளவர்கள் 2.6.2008வரை. உடல் ஊனமுற்றோர்– 20.3.2007வரை. மேற்கண்டவர்கள் தங்கள் பதிவு தொடர்பாக ஏப். 26, 27ம் தேதிகளில் அடையாள அட்டை மற்றும் கல்விச் சான்றுகளுடன் நேரில் வந்து சரிபார்த்துக் கொள்ளலாம் என உதவி இயக்குனர் பிச்சம்மாள் தெரிவித்துள்ளார