தினமலர் 29.04.2010
குடிநீர் வினியோகம் முறைப்படுத்தணும்: செய்யாறு நகராட்சியில் வலியுறுத்தல்
செய்யாறு: 6 நாளைக்கு ஒரு முறை 2 மணி நேரம் என்பதை மாற்றி, 3 நாளைக்கு ஒரு முறை ஒரு மணி நேரம் என குடிநீர் வினியோகிப்பதை முறைப்படுத்த வேண்டும் என செய்யாறு நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர். செய்யாறு நகராட்சி கூட் டம், அதன் தலைவர் சம்பத் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் மோகனவேல், இன்ஜினியர் ராஜா, துப்புரவு அதிகாரி பாஸ்கர், துப்புரவு ஆய்வாளர் மதன், ஓவர்சீயர் ராமன் பங்கேற்றனர்.
துணைத்தலைவர்: குடிநீர் வினியோகம் சீராக வழங்கிட வேண்டும்.
லோகநாதன் (அ.தி. மு.க.): நகரில் குடிநீர் வினியோக தட்டுப்பாட்டை உடனடியாக தீர்க்க வேண்டும். கை பம்புகளை உடனடியாக பழுதுபார்க்க வேண்டும்.
செல்வபாண்டியன் (தி.மு.க.): 6 நாளைக்கு ஒரு முறை 2 மணி நேரம் என்பதை மாற்றி, 3 நாளைக்கு ஒரு முறை ஒரு மணிநேரம் என குடிநீர் வினியோகத்தை முறைப்படுத்த வேண்டும்.
இன்ஜினியர்: கலெக்டர் நிதி ஒதுக்கீட்டின் கீழ் 10 லட்சம் ரூபாய் செலவில் கூடுதலாக 2 ஆழ்துளை கிணறு அமைத்தவுடன் குடிநீர் தட்டுப்பாடு தீர்ந்து விடும்.
செல்வபாண்டியன்: செம் மொழி மாநாடு நடத்துவதற்கும், திருவண்ணாமலை மருத்துவ கல்லூரி வழங்கியதற்கும் தமிழக முதல்வருக்கு பாராட்டு தெரிவிக்க வேண்டும்.
லோகநாதன் (அ.தி. மு.க.): செய்யாறு டவுன் பகுதியில் இலவச டி.வி., எப்போது வழங்கப்படும்? பாதாள சாக்கடை திட்டம் என்ன ஆயிற்று?
தலைவர்: முழு மானியமாக வழங்கிட அரசிடம் கோரி வருகிறோம்.
செல்வபாண்டியன்: ஊருக்கு வெளியே அகலமான இடத்தில் பஸ்நிலையம் அமைக்க வேண்டும்.
தலைவர்: நகரம் வளர்ச்சி அடைந்தவுடன் இது குறித்து பரிசீலிக்கலாம்.
நடேசன் (காங்.,) கன்னியம் நகர் ஏரியை பஸ்நிலையம் அமைக்க தேர்வு செய்யலாம்.
தலைவர்: இப்போதுள்ள பஸ்நிலையத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றினாலே போதும். அகன்ற இடவசதி இருக்கும்.
ஆனந்தன் (தே.மு.தி.க.): காந்தி ரோட்டில் கழிவுநீர் கால்வாய் சீரமைக்க வேண்டும்.
மணிமேகலை: ஆலமரத் தெருவில் மினிகுடிநீர் தொட்டி அமைக்க வேண்டும்.
கங்காதரன்(தி.மு.க.): சுடுகாடு பகுதி குழாயில் காற்று கூட வருவதில்லை. தண்ணீர் எப்படி வரும்?
பச்சையப்பன்(அ.தி. மு.க.): நகராட்சியில் கமிஷனர் கிடையாது. இன்ஜினியரும் பதவி உயர்வில் சென்று விடுகிறார். நகராட்சி நிர்வாகம் எப்படி செயல்படும்?
ராணி(பா.ம.க.): எனது வீட்டிலும், வார்டிலும் தண் ணீர் வருவதே இல்லை.
ஓவர்சீயர்: அந்த பகுதி மெயின் குழாய் இணைப் புக்களை ஆய்வு செய்யப்படும்.
கங்காதரன்: குடிநீரில் கலக்கும் பிளீச்சிங் பவுடர் தரமானதாக இல்லை.
தலைவர்: புகார் எதுவும் இல்லை. இருப்பினும், அடுத்த முறை உயர்தரமானதாக நீங்கள் சப்ளை செய்யுங்களேன்.
கங்காதரன்: பொதுக் குழாய்களை எப்படி மூடலாம்?
இன்ஜினியர்: மின்வாரிய அனுமதியின்றி ‘கனெக்ஷன்‘ எடுப்பீர்களா? நகராட்சி என் பது பொதுமக்கள் சொத்து. அனுமதியின்றி குழாய் இணைப்பு எடுப்பது தவறு.
செல்வபாண்டியன்: கன்னியம் நகரில் வீட்டுக்கு வீடு அனுமதியின்றி குழாய் இணைப்பு எடுத்திருக்கிறார்களே. அதை உங்களால் என்ன செய்ய முடிந்தது?
நடேசன் (காங்.,): வார்டு பகுதிகளில் புதிய குழாய் இணைப்பு குறித்து தகவல் தெரிவிப்பதே இல்லை.
சொர்ண ஜெயந்தி திட்டம் மற்றும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்