தினத்தந்தி 25.10.2013
கைப்பந்து போட்டியை தொடங்கி வைத்து விளையாடிய மேயர்

வேலூர் மாவட்ட அளவிலான விளையாட்டு ஆக்கி,
மேஜைபந்து, இறகுபந்து, கைப்பந்து, கையுந்து பந்து, கூடைப்பந்து உள்ளிட்ட
போட்டிகள் வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 2–ம்
நாளான நேற்று கைப்பந்து போட்டி தொடங்கியது. இதனை மேயர் கார்த்தியாயினி
தொடங்கி வைத்தார். முன்னாள் கைப்பந்து, கூடைப்பந்து வீராங்கனையான அவர்
அபாரமாக சர்வீஸ் போட்டு காண்பித்தம், பந்தை கைகளால் தடுத்து விளையாடியும்
வீரர், வீராங்கனைகளையும், பார்வையாளர்களையும் கவர்ந்தார்.
விளையாட்டு போட்டிகள் வருகிற 26–ந்தேதிவரை
நடைபெறும் என்றும், அன்றுமாலை வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளும்,
சான்றிதழ்களும் வழங்கப்படும் என்றும் மாவட்ட விளையாட்டு அதிகாரி
பால்சுதந்திர தாஸ் தெரிவித்தார்.