தினமணி 19.02.2010
கொசுக்களை அழிக்கும் மரத்தூள் பந்து
பொள்ளாச்சி, பிப்.18: பொள்ளாச்சிப் பகுதியில் கழிவு நீரில் உற்பத்தியாகும் கொசுக்களை அழிப்பதற்காக 5 இடங்களில் ஆயில் கலந்த மரத்தூள் பந்துகளை நகராட்சி சுகாதாரத்துறையினர் வியாழக்கிழமை போட்டனர்.
கழிவு நீர் அதிகமாகத் தேங்குமிடங்களில் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. ஒர்க்ஷாப்களில் உபயோகமில்லாமல் இருக்கும் ஆயிலுடன் மரத்தூளை ஊறவைத்துக் கிடைக்கும் பந்து உருண்டைகளைக் கழிவுநீரில் போட்டால் கொசு உற்பத்தியாவதில்லை.
பொள்ளாச்சி நகராட்சி எல்லைக்கு உள்பட்ட பாலக்காடு சாலை ரயில்வே கேட், வடுகபாளையம், பி.கே.எஸ். லேஅவுட், வள்ளியம்மாள் லேஅவுட் மற்றும் மரப்பேட்டை பகுதிகளில் கழிவுநீர் தேங்கும் இடங்களில் மரத்தூள் பந்து உருண்டைகள் போடப்பட்டன.
நகராட்சி சுகாதாரத்துறை ஆய்வாளர்கள் சுப்புராஜ், கோவிந்தராஜ், வேலுச்சாமி, ஜெரால்டு, செந்தில்குமார் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.