தினத்தந்தி 19.06.2013
கோபியில் புதிய குடிநீர் தொட்டி திறப்பு விழா கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
கோபிசெட்டிபாளையம் கச்சேரிமேடு பகுதியில் பஸ்சுக்காக காத்து நிற்கும்
மாணவ–மாணவிகள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக முன்னாள் அமைச்சர்
கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.3
லட்சம் செலவில் புதிய நிழற்குடை கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று
முன்தினம் காலை நடைபெற்றது. இந்த விழாவுக்கு, கோபிசெட்டிபாளையம் நகராட்சி
தலைவர் ரேவதிதேவி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் செல்வராஜ், நகராட்சி
ஆணையாளர் பா.ஜான்சன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சர்
கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு ரிப்பன்
வெட்டி புதிய நிழற்குடையை திறந்து வைத்தார்.

இதேபோல் வறட்சி நிவாரண திட்டத்தின் கீழ் கோபி நகராட்சிக்கு உள்பட்ட
சாமிநாதபுரம், செங்கோட்டையன் காலனி, சீதாலட்சுமிபுரம், விவேகானந்தர் வீதி,
யாகூப் வீதி ஆகிய 5 இடங்களில் ரூ.10 லட்சம் செலவில் புதியதாக ஆழ்துளை
கிணறுடன் கூடிய, பிளாஸ்டிக் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. இந்த புதிய
குடிநீர் தொட்டிகளையும் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ.
திறந்து வைத்தார்.
இந்த விழாவில் நகராட்சி நிர்வாக என்ஜினீயர் கிருஷ்ணக்குமார், மாவட்ட
மாணவரணி அமைப்பாளர் பிரினீயோ கணேஷ், நம்பியூர் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர்
தம்பி என்கிற சுப்பிரமணியம், முன்னாள் நகராட்சி தலைவர் கந்தவேல்முருகன்
மற்றும் கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.