தினகரன் 16.11.2010
கோலாப்பூர் மாநகராட்சி தேர்தலில் காங். வேட்பாளர் வெற்றிகோலாப்பூர்,நவ.16: சமீபத்தில் நடந்து முடிந்த கோலாப்பூர் மாநகராட்சி தேர்தலில் 77 உறுப்பினர்களைக்கொண்ட மாநகராட்சியில் காங்கிரஸ் 31 இடங்களிலும் தேசியவாத காங்கிரஸ் 25 இடங்களிலும் வெற்றி பெற்றது.
இம்மாநகராட்சியில் மேயர் தேர்தல் நேற்று நடந்தது. இத்தேர்தலில் காங்கிரசும் தேசியவாத காங்கிரசும் இணைந்து வேட்பாளர்களை நிறுத்தி இருந்தன. மேயர் பதவிக்கு காங்கிரஸ் சார்பாக வந்தனா சுபாசும் துணை மேயர் பதவிக்கு பிரகாஷ் சங்கரும் போட்டியிட்டனர். அவர்கள் இருவரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.