தினத்தந்தி 26.06.2013
கோவை மாநகராட்சியில் துப்புரவு பணிகளை உதவி ஆணையாளர்கள்
கண்காணிக்க வேண்டும் ஆய்வுக் கூட்டத்தில் மேயர் செ.ம.வேலுச்சாமி பேச்சு
வேண்டும்’ என்று ஆய்வு கூட்டத்தில் மேயர் செ.ம.வேலுச்சாமி பேசினார்.
ஆய்வுக் கூட்டம்
கோவை மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மேயர்
செ.ம.வேலுசாமி தலைமையில் நடைபெற்றது. மாநகராட்சி ஆணையாளர் லதா முன்னிலை
வகித்தார். கூட்டத்தில் மேயர் செ.ம.வேலுச்சாமி பேசியதாவது:–
கோவை மாநகராட்சி சிறந்த மாநகராட்சியாக தேர்வு செய்யப்பட்டு
முதலமைச்சரின் விருது கிடைத்தது. சிறந்த மாநகராட்சியாக தேர்வு செய்யப்பட்டு
அடுத்த மாமன்ற கூட்டத்தில் நன்றி தெரிவித்து பேசிய போது கோவை மாநகராட்சி
சிறந்த மாநகராட்சியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதை கட்டி காக்கின்ற
பொறுப்பு மாமன்ற உறுப்பினர்களுக்கும், அலுவலர்களுக்கும் உள்ளது என்று
தெரிவித்தேன். அதை காக்கின்ற வகையில் நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து
செயல்பட்டால்தான் அந்த பெயரை தக்க வைத்து கொள்ள முடியும்.
மாநகருக்கு தேவைகள் என்ன, மாநகரில் உள்ள பிரச்சினைகள் குறித்து
உங்களுக்கு தெரிந்த விஷயங்களை தயக்கம் இல்லாமல் நட்பு ரீதியாக சொன்னால்
இன்னும் சிறப்பாக மாநகராட்சி பணிகளில் கவனம் செலுத்த முடியும்.மக்களுக்கு
முதன்மையாக தேவைப்படுவது குடிநீர், சாலை வசதிகள், சுகாதாரம்.
தெருவிளக்குகள் போன்ற அடிப்படை தேவைகளில் நாம் தீவிர கவனம் செலுத்த
வேண்டும்.
கண்காணிக்க வேண்டும்
உதவி ஆணையாளர்கள் அவ்வப்போது வார்டுகளுக்கு சென்று துப்புரவு
பணியாளர்கள் பணிகளை சரியாக செய்கிறார்களா என்பதோடு மட்டுமில்லாமல் அவர்களை
கண்காணித்து ஊக்கப்படுத்த வேண்டும். ஆந்திராவில் வராங்கல் நகரில் குப்பைகளை
சேகரித்து அதில் உள்ள பிளாஸ்டிக் பொருள்களை தனியாக விற்பனை செய்து அதில்
கிடைக்க கூடிய தொகையை துப்புரவாளர் நல நிதிக்கு வழங்குகிறார்கள் அதனால்
அங்கு திடக்கழிவு மேலாண்மை திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அந்த
முறையை இங்கேயும் கொண்டு வருவதில் மாநகராட்சி நிர்வாகம் ஆராய்ந்து
வருகிறது. அது போல கோவை மாநகரில் சாலை விரிவாக்கத்தின் போது ஏராளமான
மரங்கள் வெட்டப்பட்டுள்ளது. அதை ஈடு செய்யும் வகையில் கோவை மாநகரில்
இருந்து புறநகர்களுக்கு செல்லும் சாலைகள் அனைத்திலும் நெடுஞ்சாலை
துறையினரின் ஓத்துழைப்போடு எந்த எந்த இடங்களில் மரக்கன்றுகளை வைக்கலாம்
என்பது குறித்து தலைமை பொறியாளர் திட்ட வரைவு தயாரிக்க வேண்டும். பாதாள
சாக்கடை திட்டப் பணிகள் சுமார் 300 கி.மீட்டர் பணி முடிவடைந்துள்ளது. அந்த
சாலைகளில் மரக்கன்றுகள் தேவையான இடங்களில் நடுவதற்கு நடவடிக்கை எடுக்க
வேண்டும்.
அவினாசி சாலை, திருச்சி சாலை ஆகியவற்றில் சென்டர் மிடியன் சிறப்பான
முறையில் அமைப்பதற்கும் முக்கிய சாலைகளில் உள்ள பூங்காக்களை தனியார்
பங்களிப்போடு சிறந்த முறையில் மேம்படுத்துவதற்கும் அலுவலர்கள் திட்டம்
வகுக்க வேண்டும். மாநகராட்சி அலுவலர்கள் தொண்டு மனப்பான்மையோடு
செயல்பட்டால் மாநகராட்சிக்கு நல்ல பெயரும், மாநகராட்சி மக்களுக்கு சேவை
செய்கின்ற திருப்தியும் கிடைக்கும் என்று தெரிவித்தார்.
மாநகராட்சி ஆணையாளர், லதா பேசுகையில் ‘அவினாசி சாலை, திருச்சி சாலை உலக
தரத்திற்கு அமைப்பது குறித்து மாநகராட்சி ஆய்வு செய்து வருகிறது. சென்னை
மாநகராட்சியில் திட்ட அறிக்கை கேட்கப்பட்டுள்ளது அது பெறப்பட்டவுடன் மேல்
நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.
சுகுமார், கணேஷ்வரன் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.