தினமலர் 20.08.2010
சமத்தூர் பேரூராட்சி விவகாரம்: அமைதிப் பேச்சு நடத்த முடிவுபொள்ளாச்சி
: பொள்ளாச்சி அடுத்த சமத்தூர் பேரூராட்சி துணைத்தலைவர் மீதான பொய்ப்புகாரை தள்ளுபடி செய்ய வேண்டுமென்று வருவாய் கோட்டாட்சியரிடம் கவுன்சிலர்கள் மனு கொடுத்தனர். சமத்தூர் பேரூராட்சி துணைத்தலைவர் கந்தசாமி, கவுன்சிலர்கள் அம்சவேணி, காளியம்மாள், சரஸ்வதி, பாலசரஸ்வதி, தங்கவேல் ஆகியோர் வருவாய் கோட்டாட்சியர் அழகிரிசாமியை நேற்று சந்தித்து பேசினர்.துணைத்தலைவர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது
: சமத்தூர் பேரூராட்சியில் கடந்த 2001- 2006 வரை தலைவராக இருந்தேன். தற்போது துணைத்தலைவராக இருக்கிறேன். எனது மனைவி பாலசரஸ்வதி 10வது வார்டு கவுன்சிலராக உள்ளார். சமத்தூர் பேரூராட்சியின் தற்போதைய தலைவர் மங்கையர்கரசி தரப்பில் ஆறு கவுன்சிலர்களும், எங்களது தரப்பில் ஆறு கவுன்சிலர்களும் இருந்ததால், குலுக்கல் முறையில் தலைவர் தேர்வு செய்யப் பட்டார். அதன்பின், பேரூராட்சி நிர்வாகம் சுமூகமாகவே நடந்து வருகிறது.இந்நிலையில்
, இலவச காஸ் அடுப்பு இணைப்பு தலைவருக்கு வேண்டப்பட்ட வார்டுகளுக்கு முதற்கட்டமாக ஒதுக்கப் பட்டது. இரண்டாவது ஒதுக்கீட்டின் போதும் பாரபட்சமாக நடக்க முயன்றதால், வருவாய் கோட்டாட்சியரிடம் புகார் செய்து முறையாக வழங்கப்பட்டது. இலவச காஸ் இணைப்பு கிடைக்காதவர்கள் பட்டியலை தயாரித்து தலைவரிடம் கொடுத்தபோது, ஒருசில கவுன்சிலர்கள் கொடுத்து பட்டியலை ஏற்காததால் என்னிடம் தெரிவித்தனர்.கடந்த
15ம் தேதியன்று கொடியேற்ற நிகழ்ச்சியின் போது, இலவச காஸ் அடுப்பு இணைப்பு கிடைக்கவில்லை என்று பெண்கள் சிலர் கேள்வி கேட்டதால் தலைவர் கோபித்துக்கெண்டு அலுவலகத்திற்குள் சென்று விட்டார்.கொடியேற்ற நிகழ்ச்சி தாமதமானதால்
, போலீசார் வந்து விசாரித்தனர். அப்போது, கொடியேற்றுவதை யாரும் தடுக்கவில்லை என்பதை போலீசார் உறுதி செய்தபின், கொடியேற்றுவதற்கு தலைவரை அழைத்தனர்.ஆனால்
, தலைவர் மங்கையர்கரசியை அவரது கணவர் சிவராஜ் அழைத்துக் கொண்டு, கொடியேற்ற முடியாது என்று கூறி விட்டார். இறுதியாக செயல்அலுவலர் கொடியேற்றினார். பேரூராட்சி அலுவலகத்தில் அன்று இதுதான் நடந்தது. என்னை பழி வாங்க வேண்டும் என்பதால் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் பொய்யான குற்றச்சாட்டு சுமத்தியுள்ளனர். இந்த பிரச்னையில் முறையான விசாரணை நடத்தி, மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.கவுன்சிலர்களும் இது சம்பந்தமாக மனு கொடுத்தனர்
. இதுதொடர்பாக தலைவர் மற்றும் துணைத்தலைவர் தரப்பினரை அழைத்து அமைதி பேச்சு நடத்தி முடிவு எடுக்கப்படும் என்று வருவாய் கோட்டாட்சியர் தெரிவித்தார்.