தினமணி 04.05.2013
சமாதிகள் எழுப்ப புதிய கட்டுப்பாடுகள்!
உதகை நகராட்சிப் பகுதி மயானங்களில் உள்ள சமாதிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக உதகை நகர்மன்ற ஆணையர் சிவகுமார் கூறியது:
உதகை நகராட்சிக்கு சொந்தமான மயானங்களில் சமாதிகள் உள்ளன. இந்த சமாதிகளை எழுப்புவதற்கு நகராட்சியில் உரிய அனுமதி பெற்றிருப்பின், நகராட்சியால் வழங்கப்பட்ட உத்தரவினை உடனடியாக நகர்மன்ற அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
உத்தரவுகளை சமர்ப்பிக்கத் தவறினால், மயானங்களில் எழுப்பப்பட்டுள்ள சமாதிகள் அப்புறப்படுத்தப்படும். மேலும் சமாதிகள் எழுப்புவதால் எதிர்கால தேவைக்கு இடமில்லாமல் போக வாய்ப்புள்ளதால், இனிவரும் காலங்களில் நகராட்சிக்குச் சொந்தமான மயானங்களில் சமாதி எழுப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.