தினமலர் 06.04.2010
சாத்தை., டவுன் பஞ்., கிணற்றை உயர்த்தி கட்ட நிதி ஒதுக்கீடு
சாத்தான்குளம்: சாத்தான்குளத்தில் பாதுகாப்பில்லாத டவுன் பஞ்.,தண்ணீர்தொட்டி கிணறு கரையை உயர்த்தி மூடி போட பொது நிதியிலிருந்து பணம் ஒதுக்கப்பட்டுள்ளது என நிர்வாக அதிகாரி சுயம்பு தெரிவித்தார்.சாத்தான்குளம்-நாசரேத் ரோட்டில் அதிக போக்குவரத்து உள்ள பகுதியில் தரைமட்டத்தில் டவுன் பஞ்.,2ம் நம்பர் வாட்டர் டேங் கிணறு உள்ளது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே நெடுஞ்சாலைத்துறையினர் ரோட்டின் ஓரத்தில் தடுப்புச்சுவர் கட்டி எச்சரிக்கைப் போர்டு வைக்க வேண்டும். டவுன் பஞ்.,நிர்வாகத்தினர் கிணற்றின் கரையை உயர்த்தி கம்பிவலை மூடி போட வேண்டும் என தினமலரில் செய்தி வந்தது. இது சம்பந்தமாக டவுன் பஞ்.,நிர்வாக அதிகாரி சுயம்பு கூறியதாவது, சாத்தான்குளம் டவுன் பஞ்.,பொது நிதியிலிருந்து 2ம் நம்பர் வாட்டர்டேங் கிணறு கரையை உயர்த்தி கம்பிவலை மூடி போடவும் மேலும் வாரச்சந்தையின் அருகில் உள்ள மாற்றுத்திறனுடையோர் பயிற்சி கூட்டத்திலிருந்து கழிவுநீர் செல்ல வடிகால் அமைப்பதற்கும் 85 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் பணி தொடங்கப்படும் என கூறினார்.