தினகரன் 26.08.2010
சிதம்பரத்தில் வாகனம் நிறுத்தும் இடம் நிறுவனங்களுக்கு துண்டறிக்கை போலீசார் விநியோகம்
சிதம்பரம், ஆக. 26 : மாவட்ட ஆட்சியர் சீத்தாராமன் தலைமையில் சிதம்பரத்தில் நடந்த நகர அபிவிருத்தி கூட்டத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற முடிவு செய்யப்பட்டது. அதன்படி நகராட்சி மற்றும் அனைத்து துறை அதிகாரிகளும் நான்கு வீதி உள்ளிட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
இது பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நான்கு வீதிகளிலும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் வாகனங்கள் நிறுத்தும் இடத்தை அறிவித்து போலீசார் முறைப்படுத்தி வந்தனர். வாகனங்கள் நிறுத்துமிடத்தை தவிர பிற இடங்களில் நிறுத்தப்படும் வாகனங்களை போக்குவரத்து போலீசார் அப்புறப்படுத்தினர். டிஎஸ்பி மூவேந்தன் தலைமையில் போக்கு வரத்து இன்ஸ்பெக்டர் கண்ணபிரான், சப்&இன்ஸ்பெக்டர் ஆனந்தஜோதி மற் றும் போலீசார் நகரில் உள்ள வர்த்தக நிறுவனங்களுக்கு சென்று வாகனங் கள் நிறுத்துமிடம் பற்றிய துண்டறிக்கைகளை வழங்கி ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொண்டனர்.