தினமணி 06.08.2010
சிதம்பரம் நகர மேம்பாடு: ஆட்சியர் தலைமையில் ஆலோசனைசிதம்பரம்
, ஆக. 5: சிதம்பரம் நகர மேம்பாடு மற்றும் பராமரித்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் தலைமையில் சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. ÷கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்: ரயில்வே மேம்பாலத்தில் மின்விளக்கு கம்பங்கள் நிறுவுதல், கோயிலைச் சுற்றியுள்ள சாலைகளை பாரமரித்தல், சாலைகளில் வாகனங்கள் நிறுத்துவதை ஒழுங்குபடுத்துதல், பொதுக் கழிப்பிடத்தை தூய்மையாக பராமரித்தல், நகர தெருக்களில் மின்விளக்குகளை சீரமைத்தல், தூய்மையான குடிநீர் விநியோகம், சுகாதாரம் பேணுவது, பேருந்து நிலைய சாலைகளை சீரமைப்பது, பயணிகளுக்கு வசதிகள் செய்து கொடுப்பது உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.÷
மாவட்ட வருவாய் அதிகாரி எஸ்.நடராஜன், அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளர் எம்.ரத்தினசபாபதி, மாவட்ட திட்ட அலுவலர் ராஜஸ்ரீ, கோட்டாட்சியர் அ.ராமராஜூ, பொதுப்பணித்துறை செயற் பொறியாளர் எஸ்.செல்வராஜ், மின்வாரிய செயற்பொறியாளர் ரா.செல்வசேகர், வட்டாட்சியர் எம்.காமராஜ், நகரமன்றத் தலைவர் ஹெச்.பௌஜியாபேகம், அண்ணாமலைநகர் பேரூராட்சி தலைவர் கீதா, டி.எஸ்.பி. மா.மூவேந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.