தினமணி 14.11.2013
சிறப்பு முகாம்கள் மூலம் நிலவேம்பு பொடி
தினமணி 14.11.2013
சிறப்பு முகாம்கள் மூலம் நிலவேம்பு பொடி
சென்னையில் வசிக்கும் பொதுமக்களுக்கு சிறப்பு
முகாம்கள் மூலம் நிலவேம்பு குடிநீர் பொடி வழங்கும் முறை மாநகராட்சி பொது
சுகாதாரத் துறை சார்பில் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த முறையை சைதாப்பேட்டை தாதண்டர் நகர் அரசு அலுவலர் குடியிருப்பில்
நிலைக்குழு தலைவர் (சுகாதாரம்) பழனி புதன்கிழமை தொடங்கி வைத்தார்.
டெங்கு போன்ற வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த நிலவேம்பு பொடி அனைத்து
மாநகராட்சி மருத்துவமனைகளிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. இது குறித்து
பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, சென்னையின் பல
பகுதிகளில் நிலவேம்பு பொடி வழங்கும் முகாம்கள் நடத்தப்படவுள்ளன.
மேலும் இதில், நிலவேம்பு குடிநீர் தயாரிப்பு முறை குறித்தும்
பொதுமக்களுக்கு விளக்கமளிக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள்
தெரிவித்தனர்.
10 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவரின் ஆலோசனையின்றி நிலவேம்பு
குடிநீர் வழங்கக் கூடாது என்பது கவனத்தில் கொள்ளவேண்டியது ஆகும்.