தினமலர் 11.01.2010
சுகாதார துறையினர் டயர் கடைகளில் ஆய்வு
கள்ளக்குறிச்சி : மழைக் காலங்களில் ஏற்படும் நோய்களை தடுப்பதற்கு கள்ளக்குறிச்சி பகுதிகளில் உள்ள டயர் கடைகளில் சுகாதார துறையினர் ஆய்வு செய்தனர்.
கள்ளக்குறிச்சி பகுதிகளில் மழைக் காலங்களில் ஏற்படும் சிக் குன் குனியா, டெங்கு காய்ச்சல் உட்பட பல நோய்களை தடுக்க பூச்சியியல் வல்லுனர் பழனிசாமி தலைமையில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் இருதய ராஜ், ஆய்வாளர் மகாலிங்கம், கணேசன் மற்றும் களப் பணியாளர்கள் குழுவினர் கள்ளக்குறிச்சி–தியாகதுருகம் மற்றும் சேலம் சாலையில் உள்ள டயர் கடைகள் மற்றும் சிமெண்ட் தொட்டிகள் செய்யும் கடைகளில் ஆய்வு செய்தனர்.
ஆய்வில் தேங்கிய மழை நீரை அப்புறப்படுத்தவும், கொசு ஒழிப்பு மருந்துகள் தெளிக்கவும் நடவடிக்கை எடுத்தனர். டயர் கடைகளில் உள்ள பழைய டயர்களை அப்புறப்படுத்தவும், மழை நீர் தேங்காமலிருக்க நடவடிக்கை எடுக்க அறிவுரை வழங்கினர். பொதுமக்கள் தங்களது வீடுகளை சுற்றிலும் சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினர்.