தினமலர் 15.08.2012
சுகாதார வளாகம் திறப்பு
சேத்தூர்: சத்தூர் பேரூராட்சியில் பெண்களுக்கான சுகாதார வளாகம் திறக்கப்பட்டது.சேத்தூர் பேரூராட்சி 11வது வார்டில் கோபால்சாமி எம்.எல்.ஏ., நிதியிலிருந்து,ரூ. 5லட்சம் செலவில் கட்டப்பட்ட, பெண்களுக்கான நவீன கழிப்பறை திறப்பு விழா, பேரூராட்சி தலைவர் முருகேஸ்வரி தலைமையில் நடந்தது.கோபால்சாமிஎம். எல்.ஏ., திறந்து வைத்து பேசுகையில்,””சேத்தூர் பகுதியில் உள்ள அனைத்து வார்டுகளுக்கும், தேலையான அடிப்படை வசதிகள் செய்து தரப்படும்.பொது மக்களுக்கு தேவையான குடிநீர்,தெருவிளக்கு,கழிப்பிட வசதிகள் செய்து தரப்படும்,” என்றார்.
பேரூராட்சி செயல் அலுவலர் முருகன், துணை த்தலைவர் சுப்பிரமணியன் வார்டு உறுப்பினர்கள்,நகர செயலாளர் செல்வகுமார்,மாவட்ட கவுன்சிலர் விஜயலட்சுமி, ஒன்றிய கவுன்சிலர் பெரியாண்டவர்,பொட்டல்பட்டி ராஜேந்திரன் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர்.