தினமணி 21.07.2010
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம் அதிகரிப்பு
சென்னை, ஜூலை 20: சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 4 நாள்களாக மழை பெய்துள்ளதையடுத்து, நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால், முக்கிய ஏரிகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
பூண்டி– நீர்மட்டம் 131.58 அடி, நீர் வரத்து 107 மி.க. அடி, மழையளவு 5 மி.மீ.; சோழவரம்– நீர்மட்டம் 49.21 அடி, நீர் வரத்து 68 மி.க. அடி, மழையளவு 4 மி.மீ.; புழல்– நீர்மட்டம் 40.38 அடி, நீர் வரத்து 72 மி.க. அடி, மழையளவு 4 மி.மீ.;
செம்பரம்பாக்கம்– நீர்மட்டம் 77.51 அடி, மழையளவு 3 மி.மீ. இந்த ஏரிகளில் கடந்த ஆண்டு இதே நாளில் மொத்த நீர் இருப்பு 4,072 மி.க. அடியாக இருந்தது. தற்போது இந்த அணைகளின் மொத்த நீóர் இருப்பு 4,397 மி.க. அடியாக உயர்ந்துள்ளது.