தினபூமி 27.01.2014
சென்னையில் அரசு அலுவலகங்களில் குடியரசு தின விழா
சென்னை.ஜன.28 – சென்னை மாநகராட்சி மற்றும் சென்னையில் உள்ள பல்வேறு மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் 65_ஆவது குடியரசு தின விழா ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ரிப்பன் கட்டடத்தில்…
சென்னை மாநகராட்சியின் ரிப்பன் கட்டட வளாகத்தில் நடந்த குடியரசு தின விழாவில், மேயர் சைதை துரைசாமி தேசியக் கொடியை ஏற்றி வைத்து, தேசிய மாணவர் படை மற்றும் சாரண, சாரணியரின் அணிவகுப்பு மாஷயாதையை ஏற்றுக் கொண்டார்.
பின்னர் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியர்கள், மருத்துவ அலுவலர்கள், செயற்பொறியாளர்கள் உள்ளிட்டோருக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கெநூரவித்தார்.
2013_14_ஆம் ஆண்டு நல்லாசிரியர் விருதுபெற்றவர்களுக்கும் கேடயங்களையும் அவர் வழங்கினார். செண்பகப்பூ மற்றும் செநூந்தரியம் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு, இந்தியன் வங்கி கிளைகளின் மூலம் வழங்கப்பட்ட தலா ரூ. 5 லட்சத்துக்கான காசோலையை மேயர் வழங்கினார். மேலும், 71 பயனாளிகளுக்கு தனி நபர் கடனாக ரூ.1.06 கோடிக்கான காசோலைகளையும், 21 அண்டை வீட்டுக் குழுக்களுக்கு ரூ.33 லட்சத்துக்கான காசோலைகளையும் அவர் அளித்தார்.
விழாவில் சென்னை மாநகராட்சி துணை மேயர் பெஞ்சமின், ஆணையர் விக்ரம் கபூர், மாமன்ற உறுப்பினர்கள், அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.