மாலை மலர் 11.09.2013

சென்னை மாநகராட்சி
ரிப்பன் கட்டிடத்தில் மூலிகை உணவகம் செயல்பட்டு வருகிறது. மூலிகை சாப்பாடு,
முடக்கத்தான் தோசை, கீரை வகை சாதங்கள் குறைந்த விலையில் விற்கப்படுகின்றன.
மூலிகை உணவுகளுக்கு பொது மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது.
இதையொட்டி
மேலும் சில மூலிகை உணவுகளை மாநகராட்சி அறிமுகம் செய்துள்ளது.
மழைக்காலத்தில் வரக்கூடிய நோய்களை தடுக்கும் வகையில் மூலிகை ரசம், சூப்
வகைகள், உணவு தானியங்கள் இன்று முதல் விற்பனை செய்யப்படுகின்றன. வரகு,
சாமை, குதிரைவாரி, தினை போன்ற அரிசி வகைளில் இட்லி, பொங்கள், உப்புமா
புதிதாக விற்பனை செய்யப்படுகிறது.
மழைக்காலத்திற்கு ஏற்ற
உணவுகளை மாநகராட்சி விற்பனை செய்கிறது. வைரஸ் காய்ச்சல் போன்றவற்றை
எதிர்க்க கூடிய நிலவேம்பு கசாயம், ஆலாரை கசாயம் போன்றவை வழங்கப்படுகிறது.
ஆலாரை கசாயம் சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாம். ரத்தத்தில் சர்க்கரையின்
அளவை கட்டுப்படுத்தும்.
சுவாசமண்டலம், சளி, இருமல், காய்ச்சல்
போன்றவற்றை தடுக்க உதவும் தூதுவளை ‘சூப்’, உடல் பருமனை குறைக்கும் ‘கொள்ளு’
ரசம் ஆகியவற்றை அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. வயிறு, குடலில் உள்ள பூச்சிகளை
அழித்து வாயு கோளாரை சரி செய்யக்கூடிய வேப்பம்பூ ரசமும் விற்கப்படுகிறது.
திணை
பாயாசம், சாமை அரிசி, முறுக்கு, கேழ்வரகு சேவு, பச்சை பயிறு, பூந்தி போன்ற
உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் நொறுக்குத்தீனி வகைகளும் கிடைக்கின்றன.
இந்த
புதிய வகை உணவு தயாரிப்பு குறித்து ஊழியர்களுக்கு பயிற்சி
அளிக்கப்பட்டுள்ளது. பயிற்சி மற்றும் உணவகம் புணரமைப்பு பணிகளுக்காக கடந்த
ஒரு வாரம் மூடப்பட்டு இருந்தது. பராமரிப்புக்கு பின்னர் மூலிகை உணவகம்
மீண்டும் இன்று திறக்கப்பட்டது. புதிய வகை உணவுகளை மக்கள் விரும்பி வாங்கி
சாப்பிட்டனர்.
சூப் மற்றும் ரசம் வகைகள் உணவகத்தின் முன் பகுதியில் காலை முதல் மாலை வரை கிடைக்கும் அவற்றின் விலை ரூ.5 ஆகும்.
மழைக்காலத்திற்கு
ஏற்ற உணவு, சூப், ரசம் போன்றவற்றை மாநகராட்சி சுகாதாரமான முறையில்
தயாரித்து குறைந்த விலையில் விற்பனை செய்வதால் இந்த உணவகத்தில் கூட்டம் அலை
மோதுகிறது.