தினத்தந்தி 30.06.2013
சேலம் கொண்டலாம்பட்டியில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
சேலம் மாநகராட்சி மக்களுக்கு மழைநீர்
சேகரிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாநகராட்சி
நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் அடிப்படையில்
கொண்டலாம்பட்டி மண்டலத்திலுள்ள பொதுமக்கள் அனைவருக்கும் விழிப்புணர்வை
ஏற்படுத்தும் வகையில் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவியர்கள்
கலந்துகொண்ட விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. கொண்டலாம்பட்டி அரசினர்
மேல்நிலைப்பள்ளியில் துவங்கிய ஊர்வலம் சந்தைப்பேட்டை, ராஜாவாய்க்கால் போன்ற
முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்ததது. இந்த
ஊர்வலத்தில் வானத்தில் மழை துளி; வையத்தின் உயிர் துளி, மழை நீரை
சேமிப்போம்; மண்வளம் காப்போம், வீட்டுக்கு வீடு மழை நீரை சேகரிப்போம்;
நீர்வளம் பெருக்குவோம் போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய அட்டைகளை
மாணவர்கள் ஏந்திசென்றனர். மேலும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வை
ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டது. இந்த
ஊர்வலத்தில், மண்டலக்குழுத் தலைவர் சண்முகம், கவுன்சிலர்கள்
மீனாட்சிசுந்தரம், பரமசிவம், பள்ளி தலைமை ஆசிரியர் மனோன்மணி மற்றும்
ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.