தினகரன் 02.06.2010
சோழிங்கநல்லூர் பேரூராட்சி கூட்டம்
துரைப்பாக்கம், ஜூன் 2: சோழிங்கநல்லூர் பேரூராட்சி கூட்டம், அதன் தலைவர் அரவிந்த் ரமேஷ் தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் சம்பத் முன்னிலை வகித்தார். துணை தலைவர் உமாபதி வரவேற்றார்.
சோழிங்கநல்லூர் மாந்தோப்பு பகுதியில் ரூ.8 லட்சத்தில் திறந்தவெளி கிணறு, ரூ.24 லட்சத்தில் 12 இடங்களில் உயர் மின்கோபுர விளக்குகள், 35 கே.வி. திறன் கொண்ட 2 ஜெனரேட்டர் வாங்குவது, ரூ.3 கோடியில் தார் சாலை, சிமென்ட் சாலை அமைப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.