தினகரன் 06.08.2010
டாக்டர்கள் குற்றச்சாட்டு மலேரியா சாவு எண்ணிக்கையை குறைத்து காட்டும் மாநகராட்சி
மும்பை, ஆக.6: மும்பை மாநகராட்சி, மலேரியா நோய்க்கு பலியானவரி களின் எண்ணிக்கையை குறைத்து தகவல் வெளி யிடுவதாக மும்பையில் உள்ள டாக்டர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மும்பையில் கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் 17 ஆயிரத்து 138 பேருக்கு மலேரியா நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது. தற்போது இந்த நோயினால் பாதிக்கப்பட்ட 4,000க்கும் மேற்பட்டோர் மருத்து வமனைகளில் அனுமதிக் கப்பட்டுள் ளனர். மூச்சுத் திணறல் மற்றும் உடல் உறுப்புகள் செயல் இழத்தல் போன்றவை காரணமாக இவர்களில் பலர் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப் பட்டுள்ளனர். அப்படி இருந்தும் மலேரியா நோய்க்கு இதுவரையில் மொத்தம் 18 பேர் மட்டுமே பலியாகி இருப்பதாக மாந கராட்சி தொரிவித்துள்ளது. இவர்களிலும் 7 பேர்தான் மலேரியா நோய் உறுதி செய்யப்பட்டவர்கள் என்றும் மீதமுள்ள 11 பேருக்கு மலேரியா உறுதி செய்யப்படவில்லை என்றும் மாநகராட்சி கூறியுள்ளது. இந்த புள்ளி விவரம் சரியானது அல்ல என்று டாக்டர் ஒருவர் கருத்து தெரிவித்தார்.
இந்துஜா மருத்து வமனையின் அவசர சிகிச் சை பிரிவில் பணியாற்றி வரும் டாக்டர் ஒருவர் இது பற்றி கூறுகையில், “மாநகராட்சி தெரிவித் துள்ள கணக்கு தவறானது. தற்போதைய நிலவரத்தின் படி மலேரியா நோயால் பாதிக்கப்பட்டர்களில் 0.5 சதவீதத்தில் இருந்து 1 சத வீதம் நோயாளிகள் இறந்து போகிறார்கள். எனவே மாநகராட்சி தெரிவித் துள்ள எண்ணிக்கையை காட்டிலும் சாவு எண்ணிக் கை பத்து மடங்கு அதிக மாக இருக்கும்Ó என்றார்.
முலுண்ட் போர்டிஸ், மாகிம் இந்துஜா மற்றும் தென்மும்பை ஜஸ்லோக் மருத்துவமனைகளின் அவசர சிகிச்சை பிரிவு களில் மலேரியா நோயாளி கள் நிரம்பி வழிவதாக தக வல்கள் தெரிவிக்கின்றன. மலேரியா நோயால் ஏற்படும் சாவுகள், அடை யாளம் தெரியாத நோய் தாக்கி இறந்ததாக காட்டப் படுவதாக மாநகராட்சி மருத்துவமனைகளில் பணியாற்றும் சில டாக்டர்கள் தெரிவித்துள் ளனர்.