தினமணி 23.02.2010
டீக்கடைகளில் சோதனை: கலப்பட டீ தூள் பறிமுதல்
சிங்கம்புணரி,பிப்.22: சிங்கம்புணரி டீக்கடைகளில் சுகாதாரத் துறையினர் திங்கசக்கிழமை நடத்திய திடீர் சோதனையில் பல கடைகளில் கலப்பட டீதூள் பறிமுதல் செய்யப்பட்டது.
மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநர் ரகுபதி உத்தரவின் பேரில் பேரூராட்சி உணவு ஆய்வாளர் தியாகராஜன், பேரூராட்சி சுகாதார மேற்பார்வையாளர் சேரலாதன், பேரூராட்சி பணியாளர்கள், சிங்கம்புணரியில் உள்ள பல டீக்கடைகளில் திடீர் சோதனை நடத்தினர். இதில் 8 கடைகளில் 20 கிலோ கலப்பட டீத்தூள் பறிமுதல் செய்யப்பட்டது.