தினமணி 19.02.2010
டீத்தூள் கடையில் சோதனை
பொள்ளாச்சி, பிப்.18: பொள்ளாச்சி, தெப்பக்குளம் வீதியில் உள்ள டீத்தூள் கடையில் நகராட்சி ஆணையாளர் வியாழக்கிழமை திடீர் சோதனை நடத்தினார்.
÷பொள்ளாச்சிப் பகுதியில் தெப்பக்குளம் வீதியில் தனியார் டீத்தூள் கடையொன்று உள்ளது. இக்கடையில் நகராட்சி ஆணையாளர் மு.வரதராஜ் திடீரென வியாழக்கிழமை சோதனை நடத்தினார். ஆணையாளருடன் சுகாதாரப் பிரிவு அதிகாரிகளும் உடனிருந்தனர்.