தினகரன் 27.08.2010
தஞ்சை நகராட்சி கூட்டம்
தஞ்சை, ஆக. 27: தஞ்சை நகராட்சியின் அவரச கூட்டம் நேற்று நடைபெற்றது. தலைவர் தேன்மொழி தலைமை வகித்தார். ஆணையர¢ நடராஜன் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் வருமாறு: சாவித்ரி (அதிமுக): 4 ராஜ வீதிகளிலும் கழிவுநீர் தேங்க¤யுள்ளது.அதே போல் குரங்குத்தொல்லையும் அதிகமாக உள்ளது. சாக்கடைகளை தூர்வார வேண்டும் என்றார். ஆணையர் : தற்போது நகராட்சி துப்புரவு பணியாளர்கள் சுகாதாரப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், பெரிய கோயில் 1000 வது ஆண்டு விழாவிற்கு மற்ற நகராட்சிகளிலிருந்து 325 துப்புரவு பணியாளர்கள் ஒரு வாரத்துக்கு முன்னதாகவே வரவழைக்கப்படுவர்.
சாமிநாதன் (அதிமுக) : பாதாள சாக்கடை திட்டம் எப்போது முழுமையாக செயல்படுத்தப்படும் ?நகரில் மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சப்படுவது தடுக்கப்படுகிறதா? என கேள்வி எழுப்பினார்.
ஆணையர் ; பாதாள சாக்கடை திட¢ட இணைப்புக்கு இன்னும் பயனாளிகள் பங்கள¤ப்புத் தொகை வசூல் செய்யப்பட்டு வருகிறது. விரைவில் திட்டம் முழுமையாக அமல்படுத்தப்படும். நகரில் மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சுபவர்கள் மீது கடும் நடவடிக்கையும், மோட்டாரும் பறிமுதல் செய்யப்படுகிறது. இவ்வாறு விவாதங்கள் நடைபெற்றது.