தினமணி 04.07.2013
தினமணி 04.07.2013
தம்மம்பட்டியில் டிராக்டர்களில் குடிநீர் விநியோகிக்க முடிவு
தம்மம்பட்டியில் பொதுமக்களுக்கு டிராக்டர் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட உள்ளது.
தம்மம்பட்டியில் குடிநீர்த் தட்டுப்பாடு நிலவுவதால், பொதுமக்களுக்கு
டிராக்டர் மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக
பேரூராட்சி மன்றத் தலைவர் பொ.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.
வயல் பகுதிகளைச் சார்ந்த வார்டுகளைத் தவிர, நகர்ப் பகுதியிலுள்ள அனைத்து
வார்டுகளுக்கும் சுழற்சி அடிப்படையில் டிராக்டர்களில் குடிநீர் வழங்கப்பட
உள்ளது.